விஸ்வரூபம் திரைப்படத்தைப் பற்றி பலர் பலவாறாக
கருத்து கூறும் இச்சமயத்தில் நானும்
ஏதாவது சொல்லனும்னு இத பதியல.. தன்
சராசரி மனிதனின் உணர்வுகளை கமல் மட்டுமல்ல
கடவுளே கஷ்டப்படுத்தினா அது தப்பு தான். ஆனால்
படம்
பார்க்கமலே அதைப்பற்றி அவதூறு கூறுவது சரியாகாது.
நான் இதை சொல்றதுனால நீ படம் பார்க்காம
சொல்றீயேனு சொல்லலாம். என்னை தான் பார்க்க
விடலையே.. படத்தை பத்தி பேச பல பேர் இருக்காங்க.
அப்படி பேசுரவங்கள பத்தி அவங்க அம்மா அப்பா வ
பத்தி பேசவும் நிறையப் பேர் இருக்காங்க. நான் இங்க
என்ன பேசலாம்னு இருக்கேன்
அப்படினா ஒரு கலைஞனோட வலியை நான்
உணர்ந்ததை பதியப் போகிறேன் .
பத்து மாதம்
ஒரு குழந்தையை சுமந்து அதனை பிரசவிக்கும்
தருவாயில் அக்குழந்தையை தாயின்
கருவறையுக்கே திரும்ப அழுத்தும்
போது அத்தாயுக்கு எவ்வளவு வலிக்கும்னு இப்ப
கமலுக்கு மட்டும் தான் தெரியும். யாரு மேலயும்
கோவம் இல்ல வருத்தம் தான் அப்படினு சொல்லும்
போதே வலியும் வேதனையும் என்
மனசை உலுக்கிடுச்சு..
என் சக சகோதரர்களான என் நண்பர்களுக்கு நான்
ஒன்னு சொல்லிக்க விரும்புகிறேன். நான்
முஸ்லிம்களை தீவிரவாதிகளாவும் பார்க்கலை.
தீவிரவாதிகளை முஸ்லிம்களா மட்டும் இல்ல,
மனிதர்களா கூட பார்க்கலை.என் உடன் பிறந்த
சகோதரியை விட என்மேல் அளவிட
முடியா அளவுக்கு என் மேல் அன்பும் பாசமும் கொண்ட
என் சகோதரி என் மதத்தைப் பார்க்கவில்லை, என்
மனத்தை மட்டும் பார்த்து பாசம் வைத்தாள் .
திரைப்படத்தை பார்த்து மற்ற மதத்தின் மீது அவதூறு பேச
எந்த தமிழனும் முட்டாள் இல்லை. அது மட்டுமல்ல
அவன் மனிதனே இல்ல. நண்பர்களே நீங்கள் எந்த
மதத்தைச் சார்ந்து இருந்தாலும் சரி மற்ற மதத்தைச்
சாடாதீர்கள்.
விஸ்வருபம் படத்தை அனைத்து மதத்தவரும்
ஒன்று சேர்ந்து வரவேற்று ஒன்றாய் காண்போம்.
தவறு இருந்தால் நாம் சேர்ந்து போராடுவோம