காத(லி)ல்
9:57 AMஇட்டு நிரப்ப இயலாத
வெற்றிடங்களை நீ
விட்டு செல்கிறாய்!
நான் வெற்றியே அடைந்தாலும்
கட்டியணைத்து கன்ன முத்தமிட
நீ இல்லா வெறுமை, என் பெருமையை
சிறுமையாக்கி விடுவதுமட்டுமல்ல!
வறுமையும் ஆக்கிவிடும்!!!
போவோம் என்று சொன்ன நீ
இன்று போ போ என்கிறாய்!
என் இயலாமையை இப்படி இயற்றி
தான் போக்கி கொள்ள வேண்டும்
அல்லது என்னை போக்கி கொல்ல வேண்டும்!!!
என்னை விட்டு சென்றதாய் நீ நினைத்திருக்கிறாய்!
நீ விட்டுச்சென்றாலும் நான் உன்னையே நினைத்திருக்கிறேன்!
நீ என்னை விட்டு செல்லவில்லை; என்னிடம்
விட்டு சென்றிருக்கிறாய்....
முதல் ஸ்பரிசத்தை,
முதல் முத்தத்தை,
முதல் அணைப்பை,
முதல் வெறுப்பை,
தூக்கமில்லா இரவுகளை,
துக்கமுள்ள கனவுகளை,
கனவில் நமக்கு பிறந்த குழந்தைகளை,
நீ, நான், நாம் உருவாக்கிய உயிரூட்டிய கற்பனைகளை,
இப்படி மொத்தமாக விட்டு சென்றிருக்கிறாய்!
ஆனால் இன்னும் எனக்குள் பத்திரமாகவே இருக்கிறது
எனக்கான நீயும்!
உனக்கான நானும்!
-------------------------------------------------------------- A.G.ஆனந்த்!!!
0 comments