நினைவு துகள்களும் நீயும்!
7:31 AMஎன் விரலிடுக்குகளில்
உன் நினைவு
துகள்கள்,
என் கருவிழிகளில்
காதல் நினைவுகள்,
மனதுக்குள் பேச
மறுத்த, மறந்த
வார்த்தைகள்,
செவிமுழுக்க நீ
பேசிய வார்த்தைகள்,
வழிநெடுகிலும்
வழிந்தோடும்
வலி கண்ணீர்த்துளி,
இவையனைத்தும்
துளிர்க்க வைத்துவிடுகிறது,
உனக்கான
எனக்கான
உனது
நினைவுகளை!
0 comments