எனது முதல் கதை.

8:35 AM

தலைப்பு: _______.
கதை:
அடிப்பாவி மக! இப்படி பண்ணிட்டாளே! இந்த அழவு மொவத்த பார்த்து கூடவா அவ மனசு ஆறல! இப்ப இந்த புள்ளயோட கதி….!
நகரத்தின் நரக கோடுகளில் சிக்காமல், தொல்லைகள் இல்லா தொலைதூர கிராமத்தின் மொத்த பேச்சும் இதான்!
”யக்கா! கேட்டியளா??” ஆரம்பித்தாள் கம்சலை.
கேட்டேன், கேட்டேன். அந்த சிறுக்கி பண்ணதுதான் பொடுசுக வரை தெரிஞ்சுடுச்சே, எனக்கு மட்டும் தெரியமலா போவும்”. முடித்தாள் செல்வி.
***
”யத்தே! யத்தேய்ய்ய்”
”என்னடி இன்னும் காணோமேனு பார்த்தேன்! எங்க வூட்டு சேவ கூவ மறந்தாலும் மறக்கும், ஆனா நீ கூவாம எங்க வூடு விடியாதுடி என் புள்ளய பாக்க வராதனு எத்தன தடவ சொல்றது” என்றாள் ராசம்!
அய்யே. உன் மவன் பெரிய மன்மத ராசா. நான் உன்னய தான் பாக்க வந்தேன். மாடு கண்ணு போட்ருக்கு, சீம்பாலு குடுக்க வந்தேன்!
அடியேய், நான்லாம் உன் வயச தாண்டி தான் வந்திருக்கேன் எனக்கு தெரியாதடி! பெரிய சரோசா தேவி நடிக்கிறாளாம் நடிப்பு! போடி போ! சிரித்தாள் ராசம்!
***
நெல்லு மூட்டைக்கு அருகில் நாகராசு படுத்திருந்தான்! சாராய நெடி வெடியாய் வெடித்தது!
“மாமா”
“மாமோய்”
“யோவ் மாமா”
“யோவ் அழுக்குமூட்டை”
“அடிங்கோ! கிறுக்கு ***. எவடி அவ!”
ம்ம் உன் பொண்டாட்டி!
எந்த ********டி என் பொண்டாட்டி! என்று கடுப்புடன் எந்திரித்தான் நாகராசு.
நல்லா பாரு மாமா! நான் தான்!!!
எங்க ஆத்தா இருக்கப்ப இங்க வராதானு எத்தன தடவ சொன்னாலும் உன் மண்டைல ஏறாதா??
ஆமா ஊரு முழுக்க பறை அடிச்சாச்சு நம்மள பத்தி, இன்னும் மோளம் அடிக்கறது தான் பாக்கி. அந்த ஊத்தப்பல்ல வெளக்கிட்டு இந்த சீம்பால தின்னு. ஆத்தா தேடும் நான் போறேன்.
சாயங்காலம் நாலு மணி ரயிலு போன பொறவு ஆத்தங்கரைக்கு வந்துரு. என்றான் நாகராசு
போ நா வரமாட்டேன். ஆத்தாக்கு தெரிஞ்சா என்னை கொன்னுபுடுவா.
நா இருப்பேன் வந்துருடி
***
காதல் முத்தத்தில் தொடங்கி காம யுத்தத்தில் முடிந்தது, ஆத்தங்கர நாணல்களும் நாணி போகும் அளவுக்கு பாசமும் ஆபாசமும் கரையில் கரைபுரண்டோடியது
***
நாகராசுக்கும், முருகாயிக்கும் வர தை மாத்தையில கல்யாணம் பேசிருக்கு பா! ரெண்டு வூட்டுலயும் சம்மதம் தானே- என்றார் ஊர்பெருசு.
சம்மதம்ங்க!
பேச வேண்டியத சபைல பேசி முடிச்சுக்கங்க. பொறவு அது குற, இது முடியாதுனுலாம் சொல்ல கூடாது..
பத்து பவுனு, ஆயிரம் ரொக்கம், பாத்திரம் பண்டம் அம்புட்டு தான் நாங்க கேக்க போரோம், என்றாள் ராசம்.
உம்ம மவன் என்ன ராசாங்க துறையா? இம்புட்டு கேக்குற என்றார் பெருசு.
கடைசியா ரெண்டு பவுனு, நூறு, பாத்திரம் பண்டம்னு பேசி முடிச்சாச்சு. இன்னும் மூணு மாத்தையில கல்யாணம், ஆவ வேண்டிய காரியத்த பாத்துக்கங்க
***
”வாராய் என் தோழி வாராயோ” கொம்பு ரேடியோல பாட்டு போட்டு, வீட்டு வாசல போட்ட பந்தல உக்காந்து தாலி கட்டினான் நாகராசு.
யம்ம்மோவ், என்னமா கூட்டத்தையே காணோம்! மொய் செலவு பண்ணலவுக்காவது வருமா!
அந்த மூனாவது தெருவுல ஒரு சிறுக்கி மக நாண்டுகிட்டாளாம், அதான் எல்லாம் சொல்லாம கூட போறானுங்க,
யாரு அந்த மாடு மேப்பாளே அவளா?
அவ தான்..
ஐயோ பாவம்…
***
உரும வேளயில ஆத்தங்கர பக்கம் போவாதீகனா கேட்டா தானே- முருகாயி சொல்ல சொல்ல விட்டத்த பாத்துகிட்டே இருந்தான் ராசு.
யத்தே! யத்தேய்ய்ய்
என்னடி கத்துற – ராசம்
காத்து கருப்பு அடிச்சுடுச்சு போல், உம்ம புள்ளைக்கு, பேசவே மாட்டேங்குறாரு என்னனு பாருங்க!
வாய கழுவுடு கிறுக்கு முண்ட. என் புள்ளய பாத்து என்ன சொல்லுறா பாரு.
சிலுப்ப சிலுப்ப ஒன்னும் பேசாம கீழ விழுந்தான் நாகராசு
மூக்குல இருந்து மூச்சு நின்னு ரத்தம் ஓடிட்டு இருந்தது.
***
உரும வேள. ஒத்த புளியமரம். ஆத்தங்கர.
கல்யாணத்துக்கு முன்ன இங்கன தான பொட்டுதுணி கூட இல்லாம அம்மணமா கிடந்தோம், நினைக்கயில சத்தமா சிரிச்சான் ராசு
மாமோய் என்ன சிரிப்பு???
எவடி அவ! என்ன மாமாங்குறவ… ஏய் ஏண்டி கண்ண மூடுற! எவடி அவ..!
உம் பொண்டாட்டி…
***
கல்யாண நாள்
புளியமரம், கடைசியா ஊர பாத்துகிட்டு புளியமரத்துல நாண்டுகிட்டா ______
***
உரும வேள,
மாமோய் என்ன சிரிப்பு???
எவடி அவ! என்ன மாமாங்குறவ… ஏய் ஏண்டி கண்ண மூடுற! எவடி அவ..!
உம் பொண்டாட்டி…
முருகாயி.. நீ என்னடி பண்ணுற இங்க??
நான் முருகாயி இல்ல!
வேற யாரு… பதறினான் ராசு…
யோவ் அழுக்கு மூட்டை…….
***
அடிப்பாவி மக! இப்படி பண்ணிட்டாளே! இந்த அழவு மொவத்த பார்த்து கூடவா அவ மனசு ஆறல! இப்ப இந்த புள்ளயோட கதி….!
மஞ்ச கயிறுள உள்ள மஞ்ச கூட காயல… அதுக்குள்ள இந்த புள்ளய தாலியறுக்க வச்சுட்டாளே அந்த மூதி _______”
*****
ஊராரின் வசைகளை வாங்கி கொண்டே தனது வயிற்றில் பிறக்காமலே இறந்த குழந்தையை நினைத்து ஒரு கண்ணில் அழுகையையும், வாழ்க்கையை சீரழித்தவனை கொண்ற சந்தோஷத்தில் ஆனந்த கண்ணிரையும் விட்டு கொண்டிருந்தாள் நாண்டுகிட்டு இறந்த நமது ___________வின் ஆன்மா!
*******

You Might Also Like

1 comments

Popular Posts

Like us on Facebook

Flickr Images